skip to main content


அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் :

       மதுரையில் இருந்து 73 கி.மீ., தூரமுள்ள சாத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் இருக்கன்குடியை அடையலாம். சாத்தூரில் இருந்து பஸ், ஆட்டோ உண்டு.

       பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும். ஆனால் இந்த அம்மனோ, இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் :

       விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள சுந்தரபாண்டியம் ஊருக்கு 1 கி.மீ., தொலைவில் கோட்டையூர் மெயின் ரோட்டில் உள்ளது.

       வைகுண்ட மூர்த்தி சுவாமி வேட்டைக்கு போகும் காட்சியுடன் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், பூரண, புஷ்கலா என்ற இரு பெருந்தேவியருடன் தம்பதி சகிதமாக, அய்யனராக கோயிலுக்கு உள்ளேயும் இருவேறுபட்ட அவதாரத்தில் ஒரே கோயிலில் அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில்

       விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் திருத்தங்கல் உள்ளது.

       பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 91 வது திவ்ய தேசம்.இது ஒருகுடைவரைக்கோயிலாகும்.

அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் :

       விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மடவார்வளாகத்திற்கு டவுன்பஸ் வசதி நிறைய உள்ளது.

       விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத்தலம் இத்திருத்தலத்தில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றது. வைத்தியநாதசுவாமியை வழிபட்டால் தீராத வயிற்று வலிதீர்ந்து போகும், அத்துடன் சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதப்பிறப்பன்று காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது பட்டு சூரிய பூஜை சிறப்பாக நடக்கும்.

அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் :

       திருச்சுழியல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. விருதுநகர் - மானாமதுரை ரயில்பாதையில் திருச்சுழியல் உள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு தெற்கே 1 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து பஸ்கள் இத்தலத்திற்கு வருகின்றன. பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில் கோயில் உள்ளது.

       இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 202 வது தேவாரத்தலம் ஆகும்.

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில்

       விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் வழியில் 15 கிமீ., தொலைவிலுள்ள மெப்கோ இன்ஜனியரிங் கல்லூரி பஸ்ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கோயிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். காலை, மாலையில் மட்டுமே பஸ் உண்டு.

       மூலவரின் சிலை நவபாஷாண சிலை என்பது சிறப்பு. மிகச்சிறிய கோயிலாக இருந்தாலும், நவபாஷாணத்தில் பெருமாள் சிலையை பார்ப்பது அரிது என்பதாலும், கீர்த்தி பெரிது என்பதாலும் சனிக்கிழமைகளில் மக்கள் வந்து செல்கின்றனர்.